Sunday, 26 February 2017

திணைமாலை நூற்றைம்பது 4 TinaiMalai 4

கோடாப் புகழ்மாறன் கூடல் அனையாளை
ஆடா அடகினும் காணேன் போர்வாடாக்
கருங்கொல்வேல் மன்னர் கலம்புக்க கொல்லோ
மருங்குல் கொம்பு அன்னாள் மயிர்      4
தலைமகள் இற்செறிந்த காலத்து,
புனத்தின்கண் வந்த தலைமகன்
தலைமகளைக் காணாது
ஆற்றாது பெயர்கின்றான்
சொல்லியது

வளையாத புகழினை உடையவன் மாறன்.
அவன் கூடல் போன்ற அழகி என் காதலி.
அவளைத் தேடுகிறேன்.
காணவில்லை.
ஆடாமல் இருக்கும் இலைகளுக்கிடையிலும் காணவில்லை.
போரில் வாட்டம் கொள்ளாத வலிய கையினை உடையவன் கொல்லன்.
கொல்லன் வேலாக மன்னர் கையில் இருக்கும் வேலில் அவள் கண்கள் புகுந்துகொண்டனவோ?
அவள் இடை அவன் செங்கோல் போல் மெலிந்து மன்னன் கையில் இருக்கிறதோ?
அவள் கூந்தல் மயிர் மன்னனுக்கு வீசும் கவரி ஆகிவிட்டனவோ?

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி