Sunday, 26 February 2017

திணைமாலை நூற்றைம்பது 2 TinaiMalai 2

சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை
அள்ளி அளகத்தின் மேலாய்ந்து தெள்ளி
இதணால் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை
உதணால் கடிந்தான் உளன்.        2
தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது

சுள்ளி, சுனையில் மலர்ந்த நீலம், சோபாலிகை, செயலை முதலான மலர்களை அள்ளி, ஆய்ந்து, தெள்ளி இவள் கூந்தலில் ஒருவன் சூட்டினான்.
பரண்மீது பாதுகாப்பாக இருந்துகொண்டு தினைப்புனம் காத்த இவளை மத ஈரம் பொர்ருந்திய ஆண்யானை ஒன்று தாக்க வந்தது.
அதனை அவன் தன் ஈட்டி (உதண்) எறிந்து ஓட்டினான்.
அவன் நினைவு இவளுக்கு

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி