Sunday, 26 February 2017

திணைமாலை நூற்றைம்பது 1 TinaiMalai 1

நறைபடர் சாந்தம் அறவேறிந்து நாளால்
உறையெதிர்ந்து வித்திய ஊழேனல் – பிறையெதிர்ந்த
தாமரைபோல் வாள் முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
மரை போந்தன ஈண்டு?               1
தலைமகளும் தோழியும் ஒருங்கு இருந்தவழிச் சென்று, தலைமகன் தோழியை மதியுடம்படுத்தது

மணம் கமழும் சந்தனத்தை அடியோடு வெட்டி எறுவர்.
பருவத்தில் மழை பொழியும்.
தினை விதைப்பர்.
முறையே திணை நிலாப் பிறை போல் கதிர் வாங்கி விளையும்.
தாமரை போன்ற முகமும், தாழ்ந்த கூந்தலும் கொண்ட அழகியரே!
என் அம்பு பட்ட மான் இந்தத் தினைப்புனத்துக்கு வந்தது.
பார்த்தீர்களா?
தினைப்புனம் காக்கும் தலைவியையும் தோழியையும் பார்த்துத் தலைவன் கேட்கிறான்.


குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி