Monday, 30 January 2017

அறநெறிச்சாரம் 184 AraNeriSaram 184

விரும்பியவர்களுக்குக் கொடுப்பர். விரும்பியவர்களிடம் பெற்றுக்கொள்வர். நல்ல குணத்தோடு கொடுப்பாரேயானால், அடுத்தடுத்துச் சென்று துன்பம் போகக் கொடுத்துக்கொண்டே இருப்பர். புலன்களை வென்றவர் இவ்வாறு கூறுவர்.

பாடல்

கொடுப்பான் பசைசார்ந்து கொள்வான் குணத்தில்
கொடுக்கப் படுதல் அமையின் – அடுத்தடுத்துச்
சென்றாங் கடைந்து களைவினை யென்பரே
வென்றார் விளங்க விரித்து. \ 184

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி