Sunday, 29 January 2017

அறநெறிச்சாரம் 172 AraNeriSaram 172

அறம் செய்யாமல் தோன்றும் பட்டாரை எமன் கொல்வான். அப்படித் தோன்றாமல் அறம் செய்யும் படாதவரைக் கண்டால் எமன் உயிர் கொல்லும் தன் வாளை உறைக்குள் வைத்துக்கொண்டு கொல்லாமல் விட்டுவிட்டுப் போய்விடுவான். இப்படி எமன் கலகம் செய்து கொடுமைப் படுத்தாமல் இருக்க புலால் குடிசையாகிய உடம்பினைப் பெற்றதன் பயனாக ஒருவன் தன்னிடம் உள்ளதைப் பகுத்துத் தந்து உண்பானாகுக.

பாடல்

பட்டார்ப் படுத்துப் படாதார்க்கு வாட்செறித்து
விட்டொழிவ தல்லாலவ் வெங்கூற்றம் – ஒட்டிக்
கலாய்க்கொடுமை செய்யாது கண்டதுபாத் துண்டல்
புலாற்குடிலா லாய பயன். \ 172

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி