Sunday, 29 January 2017

அறநெறிச்சாரம் 171 AraNeriSaram 171

கொடுத்துப் பழகியவர் கொடுத்துவைத்தவர். 
முற்பிறவியில் அறம் செய்த செல்வம் இப்பிறவியில் வந்துள்ளது. அந்தச் செல்வத்தின் பெருமை அறிந்தவர் அதனை இப்பிறவியில் கொடுக்காமல் விட்டுத் தன் பெருமையை அழித்துக் கொள்வரோ? கொடுக்க முடியாத நிலையில் இருந்தாலும், எப்படியாவது கொடுப்பர். இம்மையில் கொண்ட செல்வத்தை மறுமையிலும் கொள்ளும் பாங்கினை நல்லவர்கள் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.

பாடல்

கொடுத்துக் கொணர்ந்தறம் செல்வங் கொடாது
விடுத்துத்தம் வீறழிதல் கண்டார் – கொடுப்பதன்கண்
ஆற்ற முடியா தெனினுந்தாம் ஆற்றுவார்
மாற்றார் மறுமைகாண் பார். \ 171

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி