Saturday, 28 January 2017

அறநெறிச்சாரம் 164 AraNeriSaram 164

மனையாளும் கணவனும் மருவிய (ஒத்து இணைந்த) காதல் கொண்டு, இல்லற வண்டியை நடத்திச் செல்ல வேண்டும். அவ்வாறன்றி ஒருவரால் உயர்ந்த இல்லற இரு சக்கர வண்டியைத் தூக்கிச் செல்ல (உய்க்க) முடியாது.

பாடல்

மருவிய காதல் மனையாளும் தானும்
இருவரும் பூண்டுய்ப்பின் அல்லால் – ஒருவரால்
இல்வாழ்க்கை யென்னும் இயல்புடைய வான்சகடம்
செல்லாது தெற்றிற்று நின்று. \ 164

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி