Saturday, 28 January 2017

அறநெறிச்சாரம் 161 AraNeriSaram 161

கணவனை வழிபடுபவளாக வாழ்க்கை நடத்தி, சினம் கொள்ளாமல், கணவன் சொல்லியதைச் செய்து, கணவனை எதிர்த்துப் பேசாமல், கணவனைப் புகழ்ந்து பணிந்தால் அந்த மனைவியைக் கணவன் போற்றி அணிகலன் பூட்டி விருப்பத்தோடு தழுவி வாழ்ந்து மகிழ்வான்.

பாடல்

வழிபா டுடையாளாய் வாழ்க்கை நடாஅய்
முனியாது சொல்லிற்றுச் செய்தாங் – கெதிருரையா(து)
ஏத்திப் பணியுமேல் இல்லாளை ஆண்மகன்
போற்றிப் புனையும் புரிந்து. \ 161

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி