Saturday, 28 January 2017

அறநெறிச்சாரம் 159 AraNeriSaram 159

மனைவி பெண் எனப் போற்றப்படுவது எப்போது?
  • தன்னை மணந்துகொண்டவன் குறிப்பினை அறிந்து நடந்துகொள்ள வேண்டும்.
  • பெண்மைக் குணமாகிய நாணம் உடையவளாக இருக்க வேண்டும்.
  • கண்டதையெல்லாம் விரும்பாமல் இருக்க வேண்டும்.
  • கணவனோடு மாறுபட்டு அவன் வெறுக்கும் செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும்.
  • பிறர் பொருளைப் பிடுங்கிக்கொள்ளக் கூடாது.
  • வேண்டாதனவற்றை நீக்க வேண்டும்.
  • பெண்மை உறுப்புகளில் பெண்மை உணர்வு வேண்டும்.

இப்படி வாழ்பவள் மனைவி. இப்படி இருப்பவள் பெண்.

பாடல்

கொண்டான் குறிப்பொழுகல் கூறிய நாணுடைமை
கண்டது கண்டு விழையாமை – விண்டு
வெறுப்பன செய்யாமை வெஃகாமை நீக்கி
உறுப்போ டுணர்வுடையாள் பெண். \ 159
 
சும்மா வேடிக்கைக்கு
ஒரு பெண் படம்
முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி