Saturday, 28 January 2017

அறநெறிச்சாரம் 156 AraNeriSaram 156

கடந்த பிறப்பில் தான் செய்த வினையை இந்தப் பிறவியில் தான் பெற்றிருக்கும் பேற்றால் ஒருவன் அறிந்துகொள்வானாகுக. இப்போது பிறந்திருந்து செய்யும் வினையால் இனிப் பிறந்து வரப்போகும் பிறவியில் அடையவிருக்கும் பேற்றை உணர்ந்துகொள்வானாகுக.
செய்வினையின் தாக்கம்

பாடல்

இறந்த பிறப்பிற்றாஞ் செய்த வினையைப்
பிறந்த பிறப்பால் அறிக – பிறந்திருந்து
செய்யும் வினையால் அறிக இனிப்பிறந்(து)
எய்தும் வினையின் பயன். \ 156

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி