Saturday, 28 January 2017

அறநெறிச்சாரம் 154 AraNeriSaram 154

முந்தைய பிறவியில் தான் செய்த புண்ணியத்தின் விளைவாக இந்தப் பிறவியில் நல்லதோர் இல்லத்தில் பிறந்து இன்புற்றுக்கொண்டிருப்பவன் இந்தப் பிறவியே இன்னும் வரவேண்டும் என்று கருதுவானேல் இந்தப் பிறவியில் பிறரது துன்பங்ககளைப் போக்கி, தன் செயலில் குற்றம் வராமல் பாதுகாத்துக்கொண்டு அறச் செயல்களையே எண்ணி, முயன்று செய்வானாகுக.
இன்புற்று வாழ்பவர் அறம் செய்வாராகுக என்றது உயர்வு கருதிய கூற்று.

பாடல்

முற்பிறப்பில் தாஞ்செய்த புண்ணியத்தின் நல்லதோர்
இற்பிறந் தின்புறா நின்றவர் – இப்பிறப்பே
இன்னுங் கருதுமேல் ஏதம் கடிந்தறத்தை
முன்னி முயன்றொழுகற் பாற்று. \ 154

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி