Saturday, 28 January 2017

அறநெறிச்சாரம் 145 AraNeriSaram 145

தன்னை ஒத்த தெய்வம் ஒருவனுக்கு வேறு யாரும் இல்லை. எப்போது?
தான் தன்னைத் தன் மனத்தின் வழியே செல்ல விடாதபோது.
எழுத்தையும் எண்ணையும் கற்று நோக்குவதால் என்ன பயன்?
இம்மை மறுமை என்னும் இரண்டையும் அன்றோ நோக்க வேண்டும்.
இந்த இரண்டையும் நோக்கி அருள் பார்வை கொண்டு நிற்பதுதான் அறிவு.
இந்த அருளறிவு வாய்க்கப் பெற்றால் அவனை ஒத்த தெய்வம் வேறு ஒன்றும் இல்லை.

பாடல்

தன்னொக்குத் தெய்வம் பிறிதில்லை தான்றன்னைப்
பின்னை மனமறப் பெற்றானேல் – என்னை
எழுத்தெண்ணே நோக்கி இருமையுங் கண்டாங்(கு)
அருட்கண்ணே நிற்ப தறிவு. \ 145

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி