Saturday, 28 January 2017

அறநெறிச்சாரம் 144 AraNeriSaram 144

ஆதன் என்னும் உயிர் பெரும் களியாட்டக்காரன் (கள்ளுண்ட மயக்கத்தில் ஆடுவது களியாட்டம்) அவனுக்குத் தோழர்கள் ஐந்து பேர். (மெய், வாய், கண், மூக்கு, செவி) வீணான உறவுக்காரர்கள். தோழர் விரும்புவதெல்லாம் (வெறுப்பனவும்) உண்டு எழுந்து ஆடினால் தோழர்களை விட்டுவிட்டு மாண்டபின்னர் உண்டு துய்த்த கடனை ஆதனாகிய உயிர்தான் திருப்பிச் செலுத்தியாக வேண்டும்.
வினையைத் துய்ப்பது உயிரே
உடலாகிய தோழரும் உடன் துய்ப்பர்
கடனாளி உயுரே

பாடல்

ஆதன் பெருங்களி யாளன் அவனுக்குத்
தோழன்மார் ஐவரும் வீண்கிளைஞர் – தோழர்
வெறுப்பனவும் உண்டெழுந்து போனக்கால் ஆதன்
இறுக்குமாம் உண்ட கடன். \ 144

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி