Friday, 27 January 2017

அறநெறிச்சாரம் 128 AraNeriSaram 128

வாழ்நாளில் சரிபாதி தூக்கத்தில் கழிந்துவிடும். மீதம் உள்ள காலத்தில் துன்பத்திலும் மூப்பிலும் விழும் காலமும் உண்டு. நோயில் கவலைப்படும் காலமும் உண்டு. எஞ்சி நிற்பது எவ்வளவு? அந்தோ இந்த உலகத்தில் உள்ளவர்கள் இரங்கத் தக்கவர்.

பாடல்

வாழ்நாளிற்பாகம் துயில்நீக்கி மற்றவற்றுள்
வீழ்நா ளிடர்மூப்பு மெய்கொள்ளும் – வாழ்நாளுள்
பன்னோய் கவற்றப் பரிந்து குறையென்னை
அன்னோ அளித்திவ் வுலகு. \ 128

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி