Tuesday, 14 June 2016

சாரங்ககாணி | காளமேகப்புலவர் KalamekapPulavar 139

கண்ணன்
கஞ்சன் என்னும் கம்சனைக்
கொல்லல்
சாரங்கபாணியாம் (கையில் வில் ஏந்திய இராமர்) சக்கரத்தர் (சக்கரத்தைக் கையிலே உடைய திருமால்) கஞ்சனின் (கம்சனை) உறுப்பு ஒன்றை வெட்டி வீழ்த்தினார். நகமாகிய வாளை உடையவர். (நரசிம்ம அவதாரம்) மலரும் மாலையை அணிந்தவர். தலைவனாக நின்று யாகப் பலியை ஏற்பவர். இனிதாக உன்னை (நம்மை) எப்போதும் பாதுகாப்பார்.

பாடல்

சாரங்க பாணியாஞ் சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓரங்கங் கொய்த வுகிர்வாளர்தாரெங்கும்
ஏத்திடுமை யாகரினி தாயிவரும்மைக்
காத்திடுவ ரெப்போதுங் காண் .(139)

சாரங்கபாணியாம் சக்கரத்தர் கஞ்சனை முன் ஓரங்கம் கொய்த உகிர் வாளர் தார் எங்கும் ஏத்திடும் ஐ யாகர் இனிதாய் இவர் உம்மைக் காத்திடுவர் எப்போதும் காண்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி