Saturday, 16 April 2016

கம்மாளன் | காளமேகப்புலவர் KalamekapPulavar 129

திருப்பதி பொன்னேரியில் வாழும் அரசாகிய வேங்கடவனை பல்வேறு சாதிக்காரர்களும் வழிபட்டனராம்.

அம்மா கேள்! திருப்பதி பொன்னேரியில் வாழும் செம்மாப்பினை உடையவன், சதுரகிரித் திரு அரசு என, அன்றே தெரிந்துகொண்டு கம்மாளன், அங்கிக் கணக்கன், வாணியன், வெள்ளாளன் சேணியன் முதலானோர் துதித்தனர்.  
திருப்பதி பொன்னேரி
பொன்னன் = வேங்கடவன் \ பொன்னன் ஏரி - பொன்னேரி

பாடல்

கம்மாள னங்கிக் கணக்கனென வேதுதித்தார்
செம்மான் சதுரைத் திருவரசைஅம்மாகேள்
வாணியனும் பொன்னேரி வாழும்வெள் ளாளனுமே
சேணியனு மன்றே தெரிந்து .(129)

அம்மா கேள் பொன்னேரி வாழும் செம்மான் சதுரைத் திரு அரசை எனவே அன்றே தெரிந்து கம்மாளன் அங்கிக் கணக்கன் வாணியனும் வெள்ளாளனுமே சேணியனும் துதித்தார் - கொண்டுகூட்டு 

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.
பொன்னேரி என்னும் ஊரில் உள்ள சிவன் கோயில்
நூற்றேட்டீசுவரர் கோயில்
100 ஏட்டு ஈசுவரர் கோயில்
இந்தப் பாடலை இந்தக் கோயிலோடும் பொருத்தி உரை கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி