Friday, 15 April 2016

உள்ளங்கால் | காளமேகப்புலவர் KalamekapPulavar 128

திருவாமூரில் குடிகொண்டிருக்கும் முதல்வனாகிய சிவபெருமான் அமரர்களின் தலைவன். அவன் இங்கே திவாமூரில் இருக்கிறான். நாம் போகவேண்டிய ஊரும் இதுதான். இதனை அறியாமல் நம் உள்ளங்கால் தேய்ந்து, அதில் உள்ள வெள்ளை எலும்பு தெரியும்படி, பிறவி பிறவியாக, பல வெள்ளம் ஊழிக்காலம் நடந்து நடந்து திரிந்துவிட்டோமோ என்று தோன்றுகிறது. சரிதானே? வெள்ளம் என்னும் எண்ணிக்கையைத் தொல்காப்பியம் “அல்பெயர் எண்” என்று குறிப்பிடுகிறது.
திருவாமூர்
 
ஆமூர் சிவன் | ஆமூர் முதலி
பாடல்

உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற வொருகோடி
வெள்ளங்கா லந்திரிந்து விட்டோமோஉள்ளபடி
ஆமூர்முதலி யமரர்கோ னிங்கிருக்கப்
போமூ ரறியாமற் போய் .(128)

உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற ஒரு கோடி வெள்ளம் காலம் திரிந்து விட்டோமோ உள்ளபடி ஆமூர் முதலி அமரர் கோன் இங்கு இருக்கப் போம் ஊர் அறியாமல் போய்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி