Friday, 15 April 2016

திருந்தாடு | காளமேகப்புலவர் KalamekapPulavar 127

கமலை என்னும் திருவாரூரில் பாம்பைத் தலையில் அணிந்துகொண்டிருக்கும் ஈசன் தன் தோழன் சுந்தரருக்காக இரு காலாலும் நடந்து தூது போனால் ஆட்டம் போடாமல் வேறு என்ன செய்வார்?
சுந்தரர் இரண்டாவது மனைவியாகச் சங்கிலியார் என்பவரைத் திருவொற்றியூரில் திருமணம் செய்துகொண்டார். இந்தச் செயலுக்காக, திருவாரூரில் வாழ்ந்த முதல் மனைவி ஊடினாள். அவளது ஊடலைத் தீர்க்கத் தன் இரண்டு காலாலும் நடந்து தூது போனார். இரண்டு காலும் போனால் (போய்விட்டால்) ஆடாமல் இருக்கமுடியுமா?
சிவன் ஆடல்
 
கமலை என்னும் திரு ஆரூர் | திருவாரூர் கோயில்
பாடல்

திருந்தா டரவணியுந் தென்கமலை யீசர்
இருந்தாடா தென்செய் திடுவார்பொருந்த
ஒருகாலே யல்லவே யொண்டொடிக் காவன்
றிருகாலுஞ் சந்து போனால் .(127)

திருந்து ஆடு அரவு அணியும் தென் கமலை ஈசர் இருந்து ஆடாது என் செய்திடுவார் பொருந்த ஒரு காலே அல்லவே ஒண்தொடிக்கா அன்று இரு காலும் சந்து போனால்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி