Wednesday, 16 March 2016

கண்ணன் | காளமேகப்புலவர் KalamekapPulavar 122

புராணக் கதை விளையாட்டு.
வஞ்சப்புகழ்ச்சி அணி.
சிறுத்தொண்டர் கதை
  • கண்ணன் தன் கண்ணைப் பிடுங்கிப் பூவாகப் போட்டு உன்னை அருச்சனை செய்தான். | கண்ணப்பர் பன்றிக்கறி தந்து பூசனை செய்தார்.
  • நீ காட்டியபடி சிறுத்தொண்டர் தன் அன்பின் அடையாளமான மகன் கறியைப் படையலாக உனக்குத் தந்தார்.
  • இவை உனக்குப் போதவில்லையா?
  • தேன் மிக்க குளிர்ந்த சோலையில் வாழும் மருதீசரே!
  • அருச்சுனன் எய்த பன்றிக் குட்டியை ஏன் எய்தீர்?

பாடல்

கண்ண னிடுங்கறியுங் காட்டுசிறுத் தொண்டரன்பிற்
பண்ணுசிறு வன்கறியும் பற்றாதோதண்ணோடு
மட்டியையும் சோலை மருதீச ரேபன்றிக்
குட்டியையேன் தீத்தீர் குறித்து .(122)

கண்ணன் இடும் கறியும், காட்டு சிறுத்தொண்டர் அன்பில் பண்ணு சிறுவன் கறியும், பற்றாதோ, தண்ணோடு மட்டியையும் சோலை மருதீசரே பன்றிக் குட்டியை ஏன் தீத்தீர் குறித்து.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி