Tuesday, 15 March 2016

போல | காளமேகப்புலவர் KalamekapPulavar 121

சிவன் தன் போலப் பொன்னிறம் கொண்ட பூணாக ஆவாரம்பூவை அணிந்திருப்பவன். அதனை ஏலக்காய் போட்டு வதக்கினால் உண்ணும் இயல்பு வந்துவிடுமா? தென்மதுரைப் பாவை மீனாட்சி. அவள் பழிக்கு அஞ்சுபவள். நான்கு தலை கொண்டவன் பிரமன். நான்கு தலைக்கு எட்டு கண் (இருநான்கு). கஞ்சம் என்னும் தாமரை மேல் இருக்கும் கஞ்சன் அவன். கஞ்சன் மகன் சோமன் (நிலா). அலை – கங்கையாற்று நீரலை. சோமனையும், அலையையும் தலையில் தாங்கிக்கொண்டிருக்கும் வேந்தன் சிவன். நிலாவும், கங்கையும் இவன் தலையில் ஏறிப் பெருமை பெறுவது போல ஆவாரம்பூ பெருமை அடைவதில்லை. சிவன் தலையில் இருந்தால் மட்டும் பெருமை வந்துவிடாது என்பது கருத்து.  
 
பொன்னிற ஆவாரம்பூ
பொங்கல் விழாவில் படையலாகும் பூ
சிவன் சூடும் பூ
சமையலுக்கு உதவாத பூ
பாடல்

போலநிற மாவார்க்குப் பூணார மாவாரை
ஏலவதை செய்தா லியல்பாமோசாலப்
பழிக்கஞ்சுந் தென்மதுரைப் பாவையிரு நான்கு
விழிக்கஞ்சன் சோமனலை வேந்து .(121)

போல நிறம் ஆவார்க்குப் பூண் ஆரம் ஆவாரை ஏல வதை செய்தால் இயல்பாமோ சாலப் பழிக்கு அஞ்சும் தென்மதுரைப் பாவை யிருநான்கு விழிக் கஞ்சன் சோமன் அலை வேந்து.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி