Saturday, 12 March 2016

சதுரரங்கர் | காளமேகப்புலவர் KalamekapPulavar 119

சதுர் அரங்கர் சங்கத்து அழகர் என்னும் தொடரகள் சிவனையும் திருமாலையும் குறிக்கும் சிலேடையாக வைத்துச் சிவன் சங்கு ஊதினான் என்பது போல் பாடியது
சங்கு ஊதி நூற்றுவரைப் போருக்கு இழுத்த திருமால் 

சதுர் அரங்கர் = சதுர அரங்கில் ஆடும் சிவன்
சங்கத்து அழகர் = சங்கப் புலவனாக இருந்த சொக்கநாதர்

சதுராடி மாயம் செய்து எமாற்றும் அரங்கர் - திருமால்
சங்கைக் கையில் வைத்திருக்கும் அழகர் - திருமால்

அவர் தன் சிவந்த கையிலுள்ள சங்கைத் தன் வாயிதழில் வைத்து ஊதாமல் இருந்திருந்தால் நூற்றுவர் (துரியோதனன்-ஆதியர்) போர்களம் செல்வதற்கு முன்னர் முதலை வாழும் தாமரைக் குளத்தில் கை வைத்துப் போர் நின்றிருக்கும் அல்லவா? (தாமரைக் குளத்தில் நீராடுவோர் போரிடமாட்டார் போலும்)

பாடல்

சதுரரங்கர் சங்கத்தழ கர்செங்கைச் சங்கை
அதரமிசை வைத்திலரே யாயின் - முதலை
வருங்குளத்தின் முண்டகக்கை வைப்பரன்றே யன்று
பொருங்களத்தி னூற்றுவர்முன் போய் .(119)

சதுர் அரங்கர் சங்கத்து அழகர் செங்கைச் சங்கை அதரம் மிசை வைத்திலரே ஆயின் முதலை வருங்குளத்தின் முண்டகக் கை வைப்பர் அன்றே அன்று பொரும் களத்தில் நூற்றுவர் முன் போய் .(119)

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி