Thursday, 10 March 2016

பண்புளர்க்கு | காளமேகப்புலவர் KalamekapPulavar 118

சிவன் கையில் கங்கணம் அரவம் | பாம்பு
அமிழ்தம் பெறக் கடலைக் கடையும்போது
தோன்றிய மோகினியைச்
சிவபெருமான் மயக்கி ஏமாற்றும்
காட்சிப்படம்
பிசி என்னும் விடுகதைப் பாடல்.
  • பண்பு உள்ளவர்க்கு அன்னம் கொடு. | அன்னம் = சோறு
  • பாபம் செய்பவர்களுக்குப் பத்து போடும் நிலையைக் கொடு | அடி கொடுத்துப் பத்து போடச்செய்.
  • நட்பு இல்லாத பகைவரைக் கண்டால் நாற்காலி போட்டு அமரச் செய்து நண்பராக்கிக்கொள்.
  • உலகை ஆளும் மதுரைச் அழகிய சொக்கநாதப் பெருமான் கையில் கங்கணம் பாம்பு.
  • அந்தச் சிவபெருமானுக்கு வாகனம் நீண்ட நிலவுலகம்.


பாடல்

பண்புளர்க் கோர்பறவை பாபத்திற் கோரிலக்கம்
நண்பிலரைக் கண்டக்கா னாற்காலிதிண்புவியை
ஆள்வார் மதுரை யழகிய சொக்கர்க் கரவம்
நீள்வா கனநன் னிலம் .(118)

பண்புளர்க்கு ஓர் பறவை | பாபத்திற்கு ஓர் இலக்கம் | நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி  | திண்புவியை ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்கு அரவம் | நீள் வாகனம் நன்னிலம் .(118)

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி