Saturday, 5 March 2016

மண்டலத்தில் | காளமேகப்புலவர் KalamekapPulavar 116

புள்ளிருக்குவேளூர் கோயில் 
புள்ளிருக்குவேளூர் கோயிலில் குடிகொண்டுள்ள சிவபெருமான் வைத்தியநாதர். இவர் பூமண்டலத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் நாள்தோறும் வயித்தியம் செய்பவராக இருந்தாலும் அவரது தொண்டைக் கண்டத்தில் இருக்கும் நஞ்சாகிய வினையைத் தீர்க்கமுடியாதவராக இருக்கிறார், பாருங்கள். தொண்டர் தரும் விருந்தைப் பார்த்து உண்டு அவர்களுக்கு அருள் பாலிக்கும் அவர் தரும் மருந்தைப் பார்த்தால் சுத்தமான வெறும் மண். புள்ளிருக்கு வேளூர் மண்ணை மிதித்தால் நோய் தீர்ந்துவிடுமாம்.  

பாடல்

மண்டலத்தி னாளும் வயித்தியராய்த் தாமிருந்தும்
கண்டவினை தீர்க்கில்லார் கண்டீரோதொண்டர்
விருந்தைப்பார்த் துண்டருளும் வேளூரென் னாதர்
மருந்தைப்பார்த் தாற்சுத்த மண் .(116)

மண்டலத்தில் நாளும் வயித்தியராய்த் தாம் இருந்தும் கண்ட வினை தீர்க்கில்லார் கண்டீரோ தொண்டர் விருந்தைப் பார்த்து உண்டு அருளும் வேளூர் என் நாதர் மருந்தைப் பார்த்தால் சுத்த மண்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி