Friday, 4 March 2016

காலை | காளமேகப்புலவர் KalamekapPulavar 115

செந்துருத்தி என்னும்
திருக்கழுக் குன்றம் 
செந்துருத்தி மாநகர் என்பது திருக்கழுக்குன்றம் (பெரியபூராணம் 3027). இந்த மாநகரில் குடிகொண்டுள்ள பொய் இல்லாத மெய்யர் ஆகிய சிவபெருமான் அணிந்திருக்கும் பூண்-ஆரம் காலையில் பாலைக் கடையக் கயிறாகப் பயன்படும். மாலையில் பூ முடிந்த ஆரமாக அச் சிவபெருமான் கழுத்தில் இருக்கும்.

பாடல்

காலையிலும் பாலை கடையக் கயிறாகும்
மாலையிலும் பூமுடித்து வாழுமேசோலைசெறி
செய்யிலா ரம்பயிலும் செந்துருத்தி மாநகர்வாழ்
பொய்யிலா மெய்யரிடும் பூண் .(115)

காலையிலும் பாலை கடையக் கயிறாகும் மாலையிலும் பூமுடித்து வாழுமே சோலை செறி செய்யில் ஆரம் பயிலும் செந்துருத்தி மாநகர் வாழ் பொய் இலா மெய்யர் இடும் பூண்.


14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி