Friday, 4 March 2016

வாழ்த்து | காளமேகப்புலவர் KalamekapPulavar 114

வண்ணான் கழுதை 
பலரும் வாழ்த்தும் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த தேவடியாள் ஒருத்தி தன் குரலால் பாடினாள். அன்றைக்கு முதல்நாள் தன் கழுதை காணாமல் போயிருந்த வண்ணான் தன் கழுதைதான் கத்துகிறது என்று எண்ணிக்கொண்டு தன் பழுதைக் கயிற்றை எடுத்துக்கொண்டு கட்டிப் பிடித்து இழுத்துக்கொண்டு செல்வதற்காக என் கழுதையைக் கண்டேன் கண்டேன் என்று சொல்லிக்கொண்டு
ஓடிவந்தான்.  

  • தேவடியாள் – பணத் தெய்வத்துக்கு அடிமைப்பட்டுத் தன்னை எந்த ஆணுக்கும் தருபவள்
  • பாழ்த்த குரல் – மென்மை அல்லாத குரல்
  • பழுதை – பழங்கயிறு

பாடல்

வாழ்த்து திருநாகை வாகான தேவடியாள்
பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள் - நேற்றுக்
கழுதைகெட்ட வண்ணான் கண்டேன் கண்டேனென்று
பழுதையெடுத் தோடிவந்தான் பார் . (114)

வாழ்த்து திருநாகை வாகான தேவடியாள் பாழ்த்த குரல் எடுத்துப் பாடினாள் நேற்றுக் கழுதை கெட்ட வண்ணான் கண்டேன் கண்டேன் என்று பழுதை எடுத்து ஓடிவந்தான் பார்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி