Thursday, 3 March 2016

நாராயணன் | காளமேகப்புலவர் KalamekapPulavar 113

நாராயணன் = நாரணன்
நாராயணனைக் கம்பன் நாரணன் என்றான். அவன் சொன்ன வழியில் நான் வார் என்றால் வர் என்பேன். (சொல்வார் > சொல்வர்) வாள் என்றால் வள் என்பேன் (வருவாள் > வருவள்) நார் என்றால் நர் என்பேன் நான்.

பாடல்

நாரா யணனை நரணனென் றேகம்பன்
ஓராமற் சொன்ன வுறுதியால்நேராக
வாரென்றால் வர்ரென்பேன் வாளென்றால் வள்ளென்பேன்
நாரென்றால் நர்ரென்பேன் நான் . (113)

நாராயணனை நரணன் என்றே கம்பன் ஓராமல் சொன்ன உறுதியால் நேராக வார் என்றால் வர் என்பேன் வாள் என்றால் வள் என்பேன் நார் என்றால் நர் என்பேன் நான் .

கம்பர் சொல்லாட்சி
நன்று ஒளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட - பால:24 35/2
நாரணன் ஒக்கும் இந்த நம்பி-தன் கருணை என்பார் - அயோ:3 94/2
நல்லாறு உடை வீடணன் நாரணன் முன் - யுத்2:18 54/3
நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல் - யுத்2:19 120/1
நாரணன் படை நாயகன் உய்ப்புறா - யுத்4:37 185/1
நாரணன் திரு உந்தியில் நான்முகன் - யுத்4:37 191/1

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி