Sunday, 21 February 2016

சங்கரர் | காளமேகப்புலவர் KalamekapPulavar 99

சங்கரர் தலையில் ஆறு
எல்லாருக்கும் ஆறு தலை என்று பாடியது.
  • சங்கரன் தலையில் கங்கை ஆறு உள்ளது. 
  • சண்முகனுக்கு ஆறு தலைகள் உள்ளன. 
  • ஐந்து கை கொண்ட பிள்ளையார்க்கு மாறுபட்ட யானைத்தலை உள்ளது. 
  • சங்கைப் பிடித்த திருமாலுக்கும் பத்துப் பிறவிகளிலும் மாறுபட்ட தலை இருந்தது. 
  • பித்தா! (சிவனே) 
  • உன் திருவடிகளைப் பற்றிய அடியவர்களுக்கும் ஆறுதல் இருப்பதை நீயே பார். 


பாடல்

சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை
ஐங்கரர்க்கு மாறுதலை யானதேசங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை பித்தாநின் பாதம்
பிடித்தோர்க்கு மாறுதலை பார் . (99)

சங்கரர்க்கும் ஆறு தலை | சண்முகர்க்கும் ஆறுதலை | ஐங்கரர்க்கும் மாறு தலை ஆனதே | சங்கைப் பிடித்தோர்க்கு மாறு தலை பித்தாநின் பாதம் பிடித்தோர்க்கு மாறுதலை பார் .

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி