Saturday, 20 February 2016

ஆனார் | காளமேகப்புலவர் KalamekapPulavar 98

திருவாரூர்த் திருவிழா
சுந்தரர் பரவைநாச்சியார் திருமணம்
மேலும் இந்த விழாவின் காட்சிப் படங்கள்
சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலியார் என்பரை மணந்து சில காலம் வாழ்ந்தார். இதனை அறிந்த சுந்தரரின் முதல் மனைவி பரவையார் மனம் நொந்துபோயிருந்தார். சுந்தரமூர்த்தி திருவாரூர் மீண்டு பரவையார் இல்லம் சென்றபோது பரவையார் கதவைத் தாளிட்டுக்கொண்டு அவரை உள்ளே விடவில்லை. சுந்தரர் பரவையாரின் ஊடலைத் தீர்த்துவைக்கும்படிச் சிவபெருமானை வேண்டினார். தன் தோழனுக்காகச் சிவபெருமானே சென்றபோது பரவையார் ஊடல் தீர்ந்து சுந்தரருக்கு இடம் கொடுத்தார். 

  • பரவையாரின் ஊடலைத் தீர்க்க பிரமனும், திருமாலும் பரவையார் வாசற்படிக்குச் செல்லவில்லையே. ஊடல் தீர்க்க அயனும் திருமாலும் ஆனார் இல்லையே. 
  • கான் ஆர் அடி முடி = சுடுகாட்டில் ஆடும் சிவபெருமான் அடி, முடி.

பாடல்

ஆனா ரிலையே யயனுந் திருமாலும்
கானாரடி முடிமுன் காண்பதற்குமேனாள்
இரவுதிரு வாரூரி லெந்தைபிரான் சென்ற
பரவைதிரு வாயிற் படி . (98)

ஆனார் இலையே அயனும் திருமாலும் கான் ஆர் அடி முடி முன் காண்பதற்கு மேல் நாள் இரவு திருவாரூரில் எந்தைபிரான் சென்ற பரவை திரு வாயிற்படி.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி