Saturday, 20 February 2016

நான்கில் | காளமேகப்புலவர் KalamekapPulavar 97

நான்கு என்னும் சொல் பலமுறை வரப் பாடிய வெண்பா இது. 

  • மன்நான்கு என்றது எதுகை நோக்கி மந்நான்கு என நின்றது. 
  • மன்னி நிலைபெற்றவை அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு. இவற்றில் ஒன்றாகிய வீடு உடையவன் சிவன். 
  • முந்நான்கு பன்னிரண்டு. பன்னிரண்டு இராசிகளில் ஒன்று மேழம் (ஆடு). சிவபெருமான் ஆடுதல் (ஆட்டம்) எடுத்து ஆடுகிறான். 
  • அந்த முந்நான்கு இராசிகளில் ஒன்று ரிசபம் (விடை என்னும் காளைமாடு) இந்த விடையின் மேல் சிவன் ஏறினான் (மோதினான்) 
  • அதே முந்நான்கில் ஒன்று கன்னி
ஓ ஓ மயில் போன்றவளே! உன்னிடத்தில் கன்னித்தன்மை ஒன்று மட்டும் இருந்தால் போதுமா, அன்று உன்னை அணைத்துக்கொண்டவன் இன்று வராவிட்டால்? 

  • தலைவன் அரவணைப்பு தலைவிக்கு வேண்டும். 
  • சிவன் அருள் அனைவருக்கும் வேண்டும்.
விடை மேல் சிவன்
பாடல்

மந்நான்கி லொன்றுடையான் முந்நான்கி லொன்றெடுத்து
முந்நான்கி லொன்றின்மேன் மோதினான்முந்நான்கில்
ஒன்றிருந்தா லாகுமோ மடமயிலே
அன்றணைந் தான்வாரா விட்டால் .(97)

மம் நான்கில் ஒன்று உடையான் முந்நான்கில் ஒன்று எடுத்து முந்நான்கில் ஒன்றின் மேல் மோதினான்  முந்நான்கில் ஒன்று இருந்தால் ஆகுமோ மடமயிலே அன்று அணைந்தான் வாராவிட்டால்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி