Wednesday, 17 February 2016

தந்தை | காளமேகப்புலவர் KalamekapPulavar 95

வேளை எரித்தான் மகன் | முருகன்
வேளனை (காமனை) எரித்தவன் மகன் முருகன்.
அவன் தந்தை சிவன் பிறந்து இறவாத் தன்மையை உடையவன்.
மாமன் (திருமால்) வந்து பிறந்து இறக்கும் (10 அவதாரம்) தன்மை உடையவன்.
முன்பு ஒருநாள் மாமனின் காணிக்கு உரியவனாக முருகன் வந்திருந்தான். முருகன் திருமாலைப் போல அணிகல உடைமைகளைப் பெற்றவன்.
காணிக்கு (காணும் உடைமைக்கு) ஒரு பிள்ளை – என்பது பழமொழி.

பாடல்

தந்தை பிறந்திறவாத் தன்மையினாற் றன்மாமன்
வந்து பிறந்திறக்கும் வண்மையினால்முந்தொருநாள்
வீணுக்கு வேளை யெரித்தான் மகன்மாமன்
காணிக்கு வந்திருந்தான் காண் .(95)

தந்தை பிறந்து இறவாத் தன்மையினால் தன் மாமன் வந்து பிறந்து இறக்கும் வண்மையினால் முந்து ஒருநாள் வீணுக்கு வேளை எரித்தான் மகன் மாமன் காணிக்கு வந்திருந்தான் காண்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி