Wednesday, 17 February 2016

கஞ்சம் | காளமேகப்புலவர் KalamekapPulavar 94

பருவப் பெண் அஞ்சுமுலையாள் மகனைப் பெற்ற பின்னர் நாலுமுலையாள் ஆனாள் என்றது.
தங்கப்பூண் செருகப்பட்ட களிற்று ஆனையின் கொம்பு உன்னைக் கண்டு அஞ்சும் நிமிர்ந்த முலை தொங்கும்(நாலும்) முலை ஆனதுவும் மிகுதியான புகழ் பெற்றான் தன் மாலையைக் கண்டு பிறர் களித்ததும் குதலை கற்றான்(மகன்) பிறந்த பின்பு காண்பிறந்த பின் பெண் மார்பு தொங்கும். ஆண் மார்பில் மாலை விழும்.
 

பாடல்

கஞ்ச மகையுங் களிற் றானை யின்கொம்புன்
அஞ்சுமுலை நாலுமுலை யானதுவும்மிஞ்சுபுகழ்
பெற்றான்றன் மாலை பிறர்களித்த துங்குதலை
கற்றான் பிறந்தபின்பு காண் .(94)

கஞ்சம் அகையும் களிற்று ஆனையின் கொம்பு உன் அஞ்சுமுலை நாலுமுலை ஆனதுவும் மிஞ்சு புகழ் பெற்றான் தன் மாலை பிறர் களித்ததும் குதலை கற்றான் பிறந்த பின்பு காண்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி