Wednesday, 17 February 2016

அம்பு | காளமேகப்புலவர் KalamekapPulavar 92

அம்பு ஏந்தும் கையான் ஆனைமுகன். ஐம்புல யானைகளை வென்றவன் ஆனைமுகன். ஒரு கொம்பை ஏந்திய கொம்பேந்தி ஆனைமுகன். அவன் குடிகொண்டிருக்கும் ஊர் செங்காட்டங்குடி. அரிந்த மகனை அமுதுண்ண அழை என்று சிறுத்தொண்டனிடம் கூறிக்கொண்டு இருந்த இடம் செங்காட்டங்குடி. ஆனைமுகன் தன் ஒரு தந்தத்தை முறித்து எழுதிக் காட்டியதும், சிறுத்தொண்டர் பிள்ளைக்கறி கொடுத்ததும் ஐம்புல(ஐம்மா) வெற்றிகள்.   
சிறுத்தொண்டன்
பாடல்

அம்பேந்துங் கையா னவன்பதியி லைம்மாவைக்
கொம்பேந்தி தந்தைபணி கொண்டதோஅன்பா
யரிந்த மகவை யமுதுக் கழையென்
றிருந்தவன்றன் செங்காட்டி லே .(92)

அம்பு ஏந்தும் கையான் அவன் பதியில் ஐம் மாவைக் கொம்பேந்தி தந்தை பணி கொண்டதோ அன்பாய் அரிந்த மகவை அமுதுக்கு அழை என்று இருந்தவன் தன் செங்காட்டிலே.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி