Tuesday, 16 February 2016

ஆடும் | காளமேகப்புலவர் KalamekapPulavar 90

தியாக நடனம்
ஆட்டம் காட்டும் தியாகரே! நுமக்கு ஆட்டங்கள்தாம் ஏன்? உனக்கு வீடு இருக்கிறது. சமுசாரம் (மனைவி) இருக்கிறாள். அவள் மேல் கண்டதையெல்லாம் இட்டு, செருக்குடன் விளையாட இரண்டு சிறுவர்கள் இருக்கிறார்கள். உன்னிடம் இருக்கும் உடம்பை மட்டும் உன் மனைவியிடம் ஒற்றிக்கு ஈடாக வைத்துவிட்டாய். பின் நீ மட்டும் எப்படி ஆடுகிறாய்? எதற்காக ஆடுகிறாய்? 

பாடல்

ஆடுந் தியாகரே யாட்டமேன் றாநுமக்கு
வீடுஞ் சமுசார மேலிட்டுக்கூடிச்
செருக்கி விளையாடச் சிறுவரிரண் டாச்சே
இருக்குமூ னொற்றியாச் சே . (90)

ஆடும் தியாகரே ஆட்டமேன் தாம் நுமக்கு வீடும் சமுசாரம் மேலிட்டுக் கூடிச் செருக்கி விளையாடச் சிறுவர் இரண்டு ஆச்சே
இருக்கும் ஊன் ஒற்றி ஆச்சே.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி