Tuesday, 16 February 2016

கொங்குலவும் | காளமேகப்புலவர் KalamekapPulavar 89

மகரந்தத் துகள்கள் கொட்டிக் கிடக்கும் தென்தில்லையாகிய சிதம்பரத்தில் கோவிந்தக்கோன் (சிதம்பரம் சித்திரக்கூடம் கோவிந்தராசப் பெருமாள்) உன் முன் இருக்கும்போது, இரவு பகல் என்று பார்க்காமல் உன்னை அண்டியிருக்கும் தொண்டர்கள் பலர் காத்திருக்கும்போது, உன் செந்நிறக் கைகளிலே சோறு வாங்கி உண்ணும் ஓட்டை எடுத்துக்கொண்டு, அம்பலவாணா! தில்லை அம்பலத்துக்குள் புகுந்து ஆட்டம் காட்டுகிறாயே! அது எங்களுக்குச் செய்யும் எந்த வகையான உதவி?  
(சிதம்பரம் சித்திரக்கூடம் கோவிந்தராசப் பெருமாள்) 
 
பாடல்

கொங்குலவுந் தென்தில்லைக் கோவிந்தக் கோனிருக்கக்
கங்குல்பக லண்டர்பலர் காத்திருக்கச்செங்கையிலே
ஓடெடுத்த வம்பலவா வோங்குதில்லை யுட்புகுந்தே
ஆடெடுத்த தெந்தவுபா யம் . (89)

கொங்குலவும் தென்தில்லைக் கோவிந்தக் கோன் இருக்கக் கங்குல்பகல் அண்டர் பலர் காத்திருக்கச் செங்கையிலே ஓடு எடுத்த அம்பலவா ஓங்கு தில்லையுள் புகுந்தே ஆடு எடுத்தது எந்த உபாயம்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி