Tuesday, 16 February 2016

தாண்டி | காளமேகப்புலவர் KalamekapPulavar 88

தென்புலியார் அம்பலவாணனே! நீ பிச்சை எடுத்து உண்ணும் ஏழையாய் இருந்தால், உன்னைத் தாண்டி ஒருத்தி உன் தலையின் மேல் ஏறிக்கொள்ள மாட்டாளோ? (கங்கை சிவன் தலையில்). அணிந்திருக்கும் செருப்பால் உன்னை ஒருவன்அடிக்கமாட்டானா? (கண்ணப்பர் தன் கண்ணைப் பிடுங்கி அப்புவதற்காகத் தன் செருப்புக்காலால் கண்ணில் உதைத்துக்கொண்டது) மீண்டும் மீண்டும் உன்னை ஒருவன் வையமாட்டானோ? (சுந்தரமூர்த்தி அடிமை என்று எழுதியிருந்த ஓலையை கிழித்ததற்காக வைதார்)
சுந்தர மூர்த்தி
 
கண்ணப்பர்
சிவன் தலையில் கங்கை 
பாடல்

தாண்டி யொருத்தி தலையின் மேலேறாளோ
பூண்டசெருப் பாலொருவன் போடானோமீண்டொருவன்
வையானோ வண்முறிய மாட்டானோ தென்புலியூர்
ஐயாநீ யேழை யானால் .(88)

தாண்டி ஒருத்தி தலையின் மேல் ஏறாளோ பூண்ட செருப்பால் ஒருவன் போடானோ மீண்டு ஒருவன் வையானோ வண் முறிய மாட்டானோ தென்புலியூர் ஐயா நீ யேழை ஆனால்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி