Tuesday, 16 February 2016

நல்லதொரு புதுமை | காளமேகப்புலவர் KalamekapPulavar 81

மதுரை விக்கினேசுவரன் கோயிலின் வழிபட்டபோது பாடியது.
நல்லதொரு புதுமையை நாட்டில் கண்டேன். அதனைச் சொல்லவா? குதிரை விற்க வந்தனை கூடி உமை மதுரை விக்கினேசுவரனைப் பெற்றாள்.
மதுரைச் சொக்கநாதர் நரியைப் பரியாக்கி, மாணிக்கவாசகருக்காகக் குதிரை விற்பவராக வந்த கதை.
குதிரை விற்ற கதை 
பாடல்

நல்லதொரு புதுமை நாட்டிற்கண்டே னதனைச்
சொல்லவா சொல்லவா சொல்லவாதொல்லை
மதுரைவிக்கி னேச்சரனை மாதுமையாள் பெற்றாள்
குதிரைவிற்க வந்தவனைக் கூடி .(81)

நல்லது ஒரு புதுமை நாட்டில் கண்டேன் அதனைச் சொல்லவா சொல்லவா சொல்லவா, தொல்லை மதுரை விக்கினேச்சரனை மாது உமையாள் பெற்றாள் குதிரைவிற்க வந்தவனைக் கூடி.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி