Tuesday, 16 February 2016

வள்ளல் | காளமேகப்புலவர் KalamekapPulavar 80

மயிலாடுதுறை ஈசரை வழிபட்டபோது பாடியது.
மயிலாடுதுறை மயூரநாதருக்கு வள்ளல் என்னும் பெயரும், வெள்ளிமலையும் (இமயமலை), பொன்மலையும் (திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள பொன்மலை) உடைமையாய் இருக்க, நல்ல தெளிந்த மனத்துடன் நாள்தோறும் “அஞ்சாதே, அஞ்சாதே” என்று கூறிக்கொண்டு அண்டையிலே உமையாள் இருக்க, நஞ்சுதனை (விடத்தை) ஏன் அருந்தினார்?
மயிலாடுதுறை மயூரநாதர் கோயில்
 
பொன்மலை ஈசனார் கோயில்
பாடல்

வள்ளலெனும் பெரிய மாயூர நாதருக்கு
வெள்ளிமலை பொன்மலையு மேயிருக்கத்தெள்ளுமையாள்
அஞ்சலஞ்ச லென்றுதின மண்டையிலே தானிருக்கs
நஞ்சுதனை யேனருந்தி னார் .(80)

வள்ளல் எனும் பெரிய மாயூர-நாதருக்கு வெள்ளிமலை பொன்மலையுமே இருக்கத் தெள் உமையாள் அஞ்சல் அஞ்சல் என்று தினம் அண்டையிலே தானிருக்க நஞ்சுதனை ஏன் அருந்தினார்?

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி