Monday, 15 February 2016

ஆறும் | காளமேகப்புலவர் KalamekapPulavar 78

மா, மா – என்று வரப் பாடியது.
வேகும் கட்டையை உடையவன் வேங்கட்டன். ஆறு வயதிலும், பதினாறு வயதிலும் அவன் குதிரை ஏறுவான். அவன் ஏறும் குதிரை பரிமா என்னும் குதிரையா? அவனுக்கு ஏற்ற குதிரை வேறு குதிரை. அது எந்தக் குதிரை? அது களி கிளற வந்த வெறும் களிமா. களி கிளறும்போது வரும் கொதி ஒலி சந்த-இசை ஆகுமா?
கிளறும் கேழ்வரகுக் களிமா
பாடல்

ஆறும் பதினாறு மாமூரில் வேங்கட்டன்
ஏறும்பரி மாவா யேற்றமாவேறுமாs
எந்தமா சும்மா வெறுமா களிகிளற
வந்த மாசந்த மாமா .(78)

ஆறும் பதினாறும் ஆம் ஊரில் வேங்கட்டன் ஏறும் பரி மாவா ஏற்ற மா வேறுமா எந்த மா சும்மா வெறுமா களிகிளற வந்த மா சந்தம் ஆமா.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி