Monday, 15 February 2016

முன்னே | காளமேகப்புலவர் KalamekapPulavar 77


  • வேதம் சொல்லும் வாயை உடையவன் வேங்கடராமன். அவன் வாங்கத் தெரியாமல் ஒரு குதிரையை வாங்கி அதன் மேல் ஏறி அமர்ந்துகொண்டான். அதன் கடிவாளத்தை மூன்று பேர் முன்னேயிருந்துகொண்டு இழுத்தனர். பின்னே நின்றுகொண்டு குதிரையை இரண்டுபேர் தள்ளினர். அப்படியும் அந்தக் குதிரை ஒரு மாத காலத்திற்கு ஒருகாத தூரம்தான் சென்றது.
  • வேதம் போம் வாயான் ஒரு உடம்பை எனக்குத் தந்தான். அந்த உடம்புக் குதிரையில் என் உயிர் அமர்ந்துகொண்டது. காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று பேர் இழுத்தனர். இன்பம், துன்பம் என்னும் இரண்டு பேர் பின்னே இருந்து தள்ளினர். அது சண்டிக் குதிரை.  
குதிரை சவாரி

பாடல்

முன்னே கடிவாள மூன்றுபேர் தொட்டிழுக்கப்
பின்னே யிருந்திரண்டு பேர்தள்ளஎந்நேரம்
வேதம்போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம்போங் காத வழி . (77)

முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டு இழுக்கப் பின்னே இருந்து இரண்டு பேர் தள்ள எந்நேரம் வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை மாதம் போம் காதம் வழி.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி