Monday, 15 February 2016

என்னை | காளமேகப்புலவர் KalamekapPulavar 76

வேண்டாதவர்கள் காளமேகப்புலவரைக் களிதேவிக்குப் பலிகொடுக்க நிறுத்தினர். அப்போது இந்தப் பாடலைப் பாடினார். தப்பித்துக்கொண்டார்.
என்னைப் பலி கொடுத்தால் உனக்கு இரக்கம் உண்டாகுமா?
அழகிய தாமரை போன்ற முகம் கொண்ட காளிதேவியே! மதம் கொண்ட யானையின் கொம்பு போன்று நிமிர்ந்த முலை கொண்டவளே! நீ பெற்ற கோட்டானை (ஆனைமுகனை) எனக்குக் கொடு.
மதக் கோட்டான் | ஆனைமுகன் 
பாடல்

என்னைக் கொடுத்தா லிரக்கமுனக் குண்டாமோ
வன்னக் கமலமுக வல்லியேதுன்னுமதக்
காட்டானைக் கோட்டுமுலைக் காரிகையே நீபயந்த
கோட்டானைத் தானே கொடு .(76)

என்னைக் கொடுத்தால் இரக்கம் உனக்கு உண்டாமோ வன்னக் கமல முக வல்லியே துன்னும் மதக் காட்டு ஆனைக் கோட்டு முலைக் காரிகையே நீ பயந்த கோட்டானைத் தானே கொடு .(76)

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி