Monday, 15 February 2016

கூத்தாள் | காளமேகப்புலவர் KalamekapPulavar 75

கண்ணின் உவமைகளை அடுக்கிப் பாடியது.
கூத்தாடுகின்றாளே ஒருத்தி அவன்தன் விழிகள் நீண்ட வேலாகப் பாய்கின்றன.
அவளுக்கு மூத்தவள் ஒருத்தி இருக்கிறாளே அவள் விழிகள் முழுமையான நீலமலராகத் தோற்றம் தருகின்றன.
மூத்தவளின் தாயின் விழிகள் தாமரை மலராகத் தோன்றுகின்றன.
இந்தத் தாய்க்குத் தாயின்  விழிகள் இரண்டு அம்புகளாகப் பாய்கின்றன.
கூத்தாள் | கூத்தாடும் பெண்
 
பாடல்

கூத்தாள் விழிகணெடுங் கூர்வேலாங் கூத்தாள்தன்
மூத்தாள் விழிகண் முழுநீலம்மூத்தாள்தன்
ஆத்தாள் விழிகள ரவிந்த மாத்தாள்தன்
ஆத்தாள் விழிகளிரண் டம்பு. (75)

கூத்தாள் விழிகள் நெடும் கூர்வேல் ஆம் கூத்தாள்தன் மூத்தாள் விழிகள் முழுநீலம் மூத்தாள்தன் ஆத்தாள் விழிகள் அரவிந்தம் ஆத்தாள்தன் ஆத்தாள் விழிகள் இரண்டு அம்பு.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி