Monday, 15 February 2016

அப்பன் | காளமேகப்புலவர் KalamekapPulavar 74

ஆறுமுகக் கடவுள் உலா வரக் கண்டு, அவன் பெருமைகளை அடுக்கிக் கூறியது.
  • இவன் அப்பன் சிவபெருமான் பிச்சை எடுத்து உண்பவன்.
  • இவன் தாய் பார்வதி மலையில் பிறந்த பேய்.
  • இவன் அண்ணன் ஆனைமுகன் சப்பைக்காலன், பெரிய வயிற்றிறினை உடையவன்
ஆறுமுகத்தானுக்கு நாம் எண்ணிப் பார்க்கும் பெருமைகள் இவை.
ஆறுமுகத்தான்
பாடல்

அப்ப னிரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடிசப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்
கெண்ணும் பெருமை யிவை . (74)

அப்பன் இரந்து உண்ணி ஆத்தாள் மலை நீலி ஒப்பு அரிய மாமன் உறி திருடி சப்பைக்கால் அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத்தானுக்கு இங்கு எண்ணும் பெருமை யிவை .

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி