Monday, 15 February 2016

பூனை | காளமேகப்புலவர் KalamekapPulavar 73

பூனைக்கு 6 கால், புள்-இனத்துக்கு 9 கால், யானைக்கு 17 கால் என்று இல்லாததைச் சொல்லி இருப்பதை உறுதிப்படுத்தியது.
  • பூ(ன்) நக்கி ஆறு கால் = பூ நக்கி உண்ணும் தேனீக்கு ஆறு கால்
  • புள்ளினத்துக்கு ஒன்பது கால் = புள்ளினத்துக்கு இரண்டேகால் (9 பெருக்கல் ¼ = 2¼)
  • ஆனைக்குக் கால் பதினேழ் ஆனதே = யானைக்கு நாலே கால் ஆனதே (17 பெருக்கல் ¼ = 4¼)  
மானே கேள்
  • முண்டு அகத்தின் மீது முழு நீலம் பூத்தது உண்டு = ஒளி முன் அமர்ந்துகொண்டு கண்ணை மூடித் தவம் செய்தால் அகத்தில் (உள்ளே) நீலநிலம் பூக்கும். 
  • முண்டகம் என்னும் செந்தாமரை மேல் நீலமலர் பூத்தது – சிவன் நிறம் சிவப்பு. பார்வதி நிறம் நீலம்.
கண்டது உண்டு கேட்டது இல்லை காண்  = இவற்றை எண்ணிப் பார்த்துக் கண்டது உண்டு.
  • பூனைக்கு 6 கால் என்றும்,
  • பறவைகளுக்கு 9 கால் என்றும்,
  • யானைக்கு 17 கால் என்றும்,
  • முண்டகத் தாமரை மீது முழு நீலமலர் பூத்தது என்றும்
சொல்லக் கேட்டது இல்லை.
பூ(ன்)நக்கி | தேனீ 

பாடல்

பூனைக்கி யாறுகால் புள்ளினத்துக் கொன்பதுகால்
ஆனைக்குக் கால்பதி னேழானதேமானேகேள்
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண் .(73 )

பூனைக்கி(கு) ஆறு கால் புள்ளினத்துக்கு ஒன்பதுகால் ஆனைக்குக் கால் பதினேழ் ஆனதே மானே கேள் முண்டு அகத்தின் மீது முழு நீலம் பூத்ததுண்டு கண்டது உண்டு கேட்டது இல்லை காண் .

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி