Monday, 15 February 2016

காலனையும் | காளமேகப்புலவர் KalamekapPulavar 72

செங்காட்டங்குடி சிவனை வழிபட்டபோது பாடியது.

நாட்டுக் கோயில்களில் குடிகொண்டுள்ள நாதரே! சிவபெருமானே!
நீர்
திருச்செங்காட்டங்குடியில் (செங்காடு என்னும் சுடுகாட்டில்) குடிகொண்டிருந்தால் நீ கொன்ற பழியெல்லாம் உன்னை விட்டுப் போய்விடுமா?
சிவன் மார்கண்டேயனுக்காக எமனைக் கொன்ற கதை

பாடல்

காலனையுங் காமனையுங் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையுங் கொன்றபழி போமோசீலமுட
னாட்டிலே வீற்றிருந்த நாதரே நீர்திருச்செங்
காட்டிலே வீற்றிருந்தக் கால் .(72)

காலனையும் காமனையும் காட்டு சிறுத்தொண்டர் தரு பாலனையும் கொன்ற பழி போமோ? சீலமுடன் நாட்டிலே வீற்றிருந்த நாதரே நீர் திருச்செங்காட்டிலே வீற்றிருந்தக் கால் .

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி