Monday, 15 February 2016

வணங்கு | காளமேகப்புலவர் KalamekapPulavar 71

ஆய்ச்சி கண்ணனை மத்தால் அடித்த கதை.
  • மேனி வண்ணம் கருமையன் என்றும்,
  • வாயில் வேதம் மணப்பவன் என்றும்.
  • கண்ணன் இவன் என்றும்

கருதாமல்
மூவுலக மண்ணைக் காலடித் தாமரையாலே அளந்தானை, ஆய்ச்சி மத்தாலே அழ அழ அடித்தாள்.
ஆய்ச்சி கண்ணனைக் கோலாலால் அடிக்கிறாள்
மத்தால் அடித்தாள் - பாடல் கதை

பாடல்

வண்ணங்கரிய னென்றும்வாய் வேதநாறி யென்றுங்
கண்ணனிவ னென்றுங் கருதாமன்மண்ணை
அடிப்பது மத்தாலே யளந்தானை யாய்ச்சி
அடிப்பது மத்தாலே யழ. (71)

வண்ணம் கரியன் என்றும் வாய் வேதம்நாறி என்றும் கண்ணன் இவன் என்றும் கருதாமல் மண்ணை அடிப் பதுமத்தாலே அளந்தானை ஆய்ச்சி அடிப்பது மத்தாலே யழ.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி