Monday, 15 February 2016

முக்காலுக்கு | காளமேகப்புலவர் KalamekapPulavar 70

கீழ்வாய்ச் சிற்றிலக்க (பின்னம்) எண்களின் பெயரை அடுக்கி, வேறு பொருள் தோன்றுமாறு வெண்பா பாடி, ’கச்சி ஏகம்பனை வழிபட வேண்டும்’ என்றது.
  • கைத்தடி ஊன்றி மூன்று காலுடன் நடப்பதற்கு முன்பே,
  • முன்பாதி வயதிலேயே சாவு வருவதற்கு முன்பே,
  • அந்த எமனைக் கண்டு அஞ்சிவதற்கு முன்பே,
  • சாவுக்கு முன் காற்று விக்கி இருமுவதற்கு முன்பே,
  • பெரிய காணிநிலமாகிய சுடுகாட்டுக்குச் செல்வதற்கு முன்பே

கச்சி (காஞ்சிபுரம்) மாநகரின் எருவாக இருந்து உரமூட்டும் மாமரத்தடி ஈசன் பெயரை இன்றே சொல்லிச் சொல்லி ஓதுக.
முக்கால் முதுமை | மூன்று கால் நடை | கோல் ஊன்றி நடத்தல்

பாடல்

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கண் டஞ்சாமுன்விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
எருமாவின் கீழரையின் றோது . (70)

முக்காலுக்கு ஏகா முன் முன் அரையில் வீழா முன் அக் காலரைக் கண்டு அஞ்சா முன் விக்கி இருமா முன் மா காணிக்கு ஏகா முன் கச்சி எருமாவின் கீழரை இன்று ஓது .

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி