Monday, 15 February 2016

முப்பான் மழு | காளமேகப்புலவர் KalamekapPulavar 69

ஆனைமுகப் பிள்ளையார் எலி வாகனத்தின் மேல் வரக் கண்டு பாடியது.
ஐயோ! யானையை எலி இழுத்துக்கொண்டு போகிறதே! மூத்தவனாகிய சிவபெருமானின் சூலமும், திருமாலின் சக்கரமும், பிரமனின் கதை-ஆயுதமும் பறிபோய்விட்டதா?
(ஆயுதம் எய்து ஆனையைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா)
 
ஆனையை எலி இழுத்துச் செல்லல்
பாடல்

மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்
பாப்பான் கதையும் பறிபோச்சே- மாப்பார்
வலமிகுத்த மும்மத்தது வாரணத்தை யையோ
எலியிழுத்துப் போகின்ற தே .(69)

மூப்பான் மழுவும் முராரி திருச் சக்கரமும் பாப்பான் கதையும் பறிபோச்சே மாப்பார் வலம் மிகுத்த மும்மத்தது வாரணத்தை ஐயோ எலி இழுத்துப் போகின்றதே

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி