Sunday, 14 February 2016

எட்டு | காளமேகப்புலவர் KalamekapPulavar 68

தமிழ்க் கீழ்வாய்ச் சிற்றிலக்கக் குறியீடுகள் சிலவற்றைப் புகுத்திப் பாடிய வெண்பா.
காளை ஊர்தியில் சிவன் 

மேலோர் தொழும் திருவெற்றியூர் சிவபெருமான், காளை ஊர்தியில் தெரு வழியே வந்தபோது ஒரு அம்மா மேனியளின் முலை மேல் இருந்த ஆடை ‘சூ’ பாய்ந்தோடிவிட்டதே.
  • எட்டு = அ (தமிழ்-எண் குறி)
  • ஒருமா = மா
  • எண்காணி = எட்டு காணி = இருமா = இரண்டு மா = இரண்டு முலை யானை

அம்மாவின் இரண்டு மூலை மேல் இருந்த ஆடை
  • பட்டு = பட்டாடை
  • நான்மா = 1/10 சூ (தமிழ்எண் குறி)

‘சூ’
பாய்ந்ததே
தமிழ் எண்குறி

பாடல்

எட்டொருமா வெண்காணி மீதே யிருந்தகலை
பட்டொருமா நான்மாவிற் பாய்ந்தேசிட்டர்தொழுந்
தேவாதிதேவன் றிருவொற்றி யூருடையான்
மாவேறி வீதிவரக் கண்டு.(68)

எட்டு ஒருமா எண் காணி மீதே இருந்த கலை பட்டு ஒருமா நான்மாவில் பாய்ந்தே, சிட்டர் தொழும் தேவாதி தேவன் திருவொற்றி ஊருடையான் மா ஏறி வீதி வரக் கண்டு.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி