Sunday, 14 February 2016

மாயனார் | காளமேகப்புலவர் KalamekapPulavar 67

கண்ணனாகிய மாயனார் போற்றும் ஊர் மதுராபுரி (வடமதுரை). மதுராபுரிச் (தென்மதுரை) சொக்கநாதப் பெருமானுக்குப் பித்துப் பிடித்துவிட்டது என்று அங்கயற்கண்ணி (மீனாட்சி) வாய்க்குள் சோறு இறங்காமல் வருந்திக்கொண்டிருந்தாள். (கணவனுக்குப் பித்துப் பிடித்துவிட்டால், மனைவி என்ன செய்வாள், பாவம்) ஐயகோ!


பாடல்

மாயனார் போற்றுமது ராபுரிச் சொக்க
நாயனார் பித்தேறி னாரென்றேநேயமாங்
கன்னன்மொழி யங்கயற்கட் காரிகையா ளையையோ
அன்னமிறங் காமலிருந் தாள் . (67)

மாயனார் போற்றும் மதுராபுரிச் சொக்க நாயனார் பித்தேறினார் என்றே நேயமாம் கன்னல் மொழி அங்கயற்கண் காரிகையாள் ஐயையோ அன்னம் இறங்காமல் இருந்தாள்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி