Sunday, 28 February 2016

எட்டிகுளம் | காளமேகப்புலவர் KalamekapPulavar 111

சரக்கு விற்கும் செட்டி 
எட்டிகுளம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளதோர் ஊர். அங்கு இருந்துகொண்டு தன் சரக்குப் பண்டங்களை விற்பவன் குட்டிசெட்டி என்னும் வணிகன். அவன் தன் மகளை மணம் முடித்துத் தர, 1000 யானை, 700 பசு, 85 களை ஆகியவற்றை அவளுடன் தந்தான்.

  • நொட்டுதல் = உடலுறவு கொள்ளுதல் போல் வாயுறவு கொள்ளுதல் (இடக்கர் அடக்கல்)  

பாடல்

எட்டி குளத்தி லிருந்து சரக்குவிற்கும்
குட்டிசெட்டி தன்மகளைக் கொண்டுபோய்நொட்டுதற்கே
ஆயிரம் யானை யெழுநூறு கூன்பகடு
பாயும்பக டெண்பத் தைந்து . (111)

எட்டிகுளத்தில் இருந்து சரக்கு விற்கும் குட்டிசெட்டி தன்மகளைக் கொண்டுபோய் நொட்டுதற்கே ஆயிரம் யானை எழுநூறு கூன் பகடு பாயும் பகடு எண்பத்தைந்து .

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி